திங்கள், 28 நவம்பர் 2022
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (16:55 IST)

ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதி இல்லை! – பிசிசிஐ அதிரடி!

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இந்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த தொடரிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரலில் நடைபெற வேண்டிய நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக டிசம்பரில் அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி ஏப்ரலில் தொடங்க பிசிசிஐ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல்லில் விளையாட உள்ள வீரர்கள் சிலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மற்ற வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், போட்டிகள் தொடங்கும் முன்னதாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனால் இந்த ஐபிஎல் தொடரிலும் மைதானத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.