திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (11:43 IST)

பெங்களூரு அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே டெல்லி கேப்பிடல் அணியின் நட்சத்திர வீரரான அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்திகொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியின் முக்கிய வீரர் படிக்கலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
 
ஏற்கனவே மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பணிபுரியும் 10 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் இதனால் மும்பையில் போட்டிகளை நடத்தலாமா? அல்லது வேறு இடத்துக்கு மாற்றலாமா? என பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் வீரர்களுக்கும் அடுத்தடுத்து கொரோனா பரவி வருவது ஐபிஎல் நிர்வாகத்திற்கு பேரதிர்ச்சியாக உள்ளது