1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva

50 ஓவர் ஒருநாள் போட்டிகள் இனி நடக்குமா? சந்தேகம் தெரிவித்த அஸ்வின்

50 ஓவர் ஒருநாள் போட்டிகள் இனி நடக்குமா? சந்தேகம் தெரிவித்த அஸ்வின்
டி20 கிரிக்கெட்டின் அசுர வளர்ச்சி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தனித்துவமான முக்கியத்துவத்திற்கு மத்தியில், 50 ஓவர் ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார். 
 
2027-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு,  50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நீடிக்குமா என்பதில் தமக்கு ஐயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் தற்போது ஒருநாள் போட்டிகளை விட விறுவிறுப்பான டி20 ஆட்டங்களையே அதிகம் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தற்போது ஒருநாள் போட்டிகள் உயிருடன் இருப்பதற்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் விளையாடுவதே முக்கிய காரணம் என்று அஸ்வின் கருதுகிறார். முன்னதாக தோனி போன்ற வீரர்கள் ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று முடிக்கும் அந்த விறுவிறுப்பு இப்போது குறைந்துவிட்டதாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
 
ஒருநாள் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டுமென்றால், ஐசிசி சில அதிரடி மாற்றங்களைச் செய்ய வேண்டும் என அஸ்வின் பரிந்துரைத்துள்ளார். குறிப்பாக, டி20 லீக் தொடர்கள் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்களை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தினால், மக்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என அவர் கூறியுள்ளார். 
 
Edited by Siva