திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (15:17 IST)

அமெரிக்க டி20 கிரிக்கெட்டில் பங்கேற்கும் நைட் ரைடர்ஸ் அணி!

தற்போது பல நாடுகளில் கிரிக்கெட் பிரபலமான விளையாட்டாக மாறியுள்ள நிலையில் அமெரிக்காவில் புதிதாக தொடங்க இருக்கும் டி20 கிரிக்கெட் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி பங்கேற்க உள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை உருவாக்கிய ஷாரூக்கான், ஜெய் மேத்தா மற்றும் அவரது மனைவி ஜூஹி சாவ்லா ஆகியோர் நைட் ரைடர்ஸ் என்ற நிறுவனத்தையே உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாது இலங்கை நடத்தும் சிபிஎல் டி20 தொடரிலும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் என்ற அணியை களமிறக்கியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவும் குறைந்த ஓவர் கொண்ட டி20 தொடர்களை அமெரிக்காவில் அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் எனப்படும் எம்.எல்.சி டி20 போட்டியை நடத்த உள்ளனர். இதில் நைட் ரைடர்ஸ் நிறுவனமும் தனது புதியதொரு அணியை களமிறக்க உள்ளனர். அணியின் பெயர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.