திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (19:05 IST)

IPL 2024: டாஸ் வென்ற மும்பை எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 7 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இனிமேல் வரும் போட்டிகள் ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்தும் என்பதால் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று ஜெய்ப்பூரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள 38 ஆவது போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்
இஷான் கிஷன்(w), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேட்ச்), டிம் டேவிட், நேஹால் வதேரா, முகமது நபி, ஜெரால்டு கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரிட் பும்ரா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்