1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (12:44 IST)

காதலனை கரம்பிடிக்க இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் சிறுமி.. இந்திய அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!

india pakistan
காதலனை கரம்பிடிக்க இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் சிறுமி.. இந்திய அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!
பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி ஒருவர் இந்திய இளைஞனை காதலித்த நிலையில் காதலனை கரம் பிடிப்பதற்காக எல்லை தாண்டிய சிறிமி ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பாகிஸ்தானை சேர்ந்த 16 வயது சிறுமி ஆன்லைன் மூலம் உத்தர பிரதேச மாநில இளைஞரை காதலித்து உள்ளார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில் பாகிஸ்தான் சிறுமி இந்தியா வருவதற்கு முயற்சி செய்தார். ஆனால் விசா கிடைக்காததை அடுத்து நகைகளை விற்று துபாய்க்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து நேபாளம் வந்துள்ளார். இதனை அடுத்து இந்திய காதலனும் நேபாளம் வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துள்ளனர். இதனை அடுத்து இருவரும் எல்லை வழியாக இந்தியா வந்தபோது எல்லை பாதுகாப்பு படையினரால் சுற்றி படைக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர்களிடம் விசாரணை செய்தபோது சிறுமிக்கு பதினாறு வயதில் ஆகிறது என்றும் அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது 
 
இதனை அடுத்து பாகிஸ்தானில் உள்ள அவருடைய பெற்றோருக்கு வாட்ஸ் அப் மூலம் இந்திய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதனை எடுத்து இந்திய அதிகாரிகளின் மூலம் தகவல் பெற்ற சிறுமியின் பெற்றோர் உடனடியாக எல்லை பகுதிக்கு வந்தனர் 
 
அவரிடம் சிறுமியை இந்திய அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் அந்த சிறுமியை திருமணம் செய்த இளைஞரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran