செவ்வாய், 18 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 10 அக்டோபர் 2025 (12:46 IST)

ரசிகர்களோடு பேச மொழி தடையாக இருந்தது இல்லை… தோனி பதில்!

ரசிகர்களோடு பேச மொழி தடையாக இருந்தது இல்லை… தோனி பதில்!
தமிழ் நாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி கணிசமான ஆண்டுகள் விளையாடிய கிரிக்கெட்டர்கள் வெகு சொற்பமே. ஆனாலும் கிரிக்கெட் மீது தமிழக மக்களுக்கு எப்போதும் அளப்பரியக் காதல் உண்டு. இந்நிலையில் சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையில் புதிய சர்வதேசக் கிரிக்கெட் மைதானம் ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் மதுரையின் புதிய அடையாளமாக மாற உள்ளது.

இந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வரும் காலங்களில் டிஎன்பிஎல், ஐபிஎல் போட்டிகள், உள்நாட்டு ட்ராபி போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த கிரிக்கெட் மைதானத்தை இன்று கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி திறந்து வைத்தார்.

அப்போது அவர் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது “தமிழ் ரசிகர்களோடு பேச எனக்கு மொழி என்றுமே தடையாக இருந்தது இல்லை. யாராவது என்னிடம் தமிழ் தெரியுமா என்று கேட்டால் ’மதியம் சாப்டீங்களா’ எனக் கேட்பேன்” என ஜாலியாக பதிலளித்துள்ளார்.