கரூர் துயர சம்பவம் விவகாரம் சிபிஐ விசாரணைக்கு செல்கிறதா? நீதிபதிகள் தீவிர விசாரணை..!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரியும், இதுபோன்ற அரசியல் கூட்டங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயரச் சம்பவம் தொடர்பாக மொத்தம் 7 பொதுநல வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் ஆகியோர் இந்த ஏழு பொதுநல வழக்குகளும் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்படும் என அறிவித்தனர். மற்ற வழக்குகளை விசாரித்த பிறகு, இறுதியில் இந்த வழக்குகளை எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
முக்கியமாக, அரசியல் கூட்டங்களுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரும் மனுக்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
Edited by Siva