1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. MS Dhoni parents suffered from corona and hospitalized

சிஎஸ்கே கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா!

IPL
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் கேப்டன் தோனியின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான கேப்டனாக தோனியே தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அதிக ரன்ரேட் பெற்றதுடன் வெற்றியும் பெற்றது.

தோனியின் பெற்றோர் ராஞ்சியில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கேப்டன் தோனி அணியில் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அபராதம் – பிசிசிஐ உத்தரவு!