ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (07:37 IST)

அதிகமாகும் இம்பேக்ட் பிளேயருக்கான எதிர்ப்பு… சிராஜ் வைக்கும் வேண்டுகோள்!

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ‘இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு  முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.

இதன் மூலம் இப்போது போட்டிகளில் ஒரு அணி 12 வீரர்களோடு விளையாடுகிறது என்றே சொல்லிவிடலாம். இந்த விதிமுறை ஐபிஎல் கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக திணிக்கப்பட்டதாகவே உள்ளது.

இதற்கு ரோஹித் ஷர்மா உள்ளிட்டவர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இப்போது ஆர் சி பி பவுலரான முகமது சிராஜும் இந்த விதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் “இம்பேக்ட் ப்ளேயர் விதியை தயவு செய்து நீக்கிவிடுங்கள். ஏற்கனவே ஆடுகளங்கள் எல்லாம் பேட்டிங்குக்கு சாதகமாக வடிவமைக்கப்படுகின்றன. இதனால் பேட்டர்கள் வந்தவுடனே அடித்து ஆரம்பித்துவிடுகிறார்கள்.  இப்போதெல்லாம் 260 ரன்கள் என்பது சாதாரணமாகிவிட்டது. பவுலர்களுக்கு என்று எந்த சாதகமான விஷயமும் இல்லை. ” எனக் கூறியுள்ளார்.