அதிபர் பதவியேற்றதும் சீனா செல்ல டிரம்ப் விருப்பம்.. இந்தியாவுக்கு வருவாரா?
அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருக்கின்ற நிலையில், அவர் பதவியேற்ற உடன் முதல் சுற்று பயணமாக சீனா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்ற நிலையில், நாளை அவர் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் படி, சீனாவுடன் உறவை மேம்படுத்த டிரம்ப் விருப்பம் கொள்வதாகவும், எனவே அதிபர் பதவி ஏற்றதுடன் முதல் சுற்றுப்பயணம் ஆக அவர் சீனா செல்ல விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சீனாவுக்கு அடுத்தபடியாக அவர் இந்தியாவுக்கு செல்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்றும், விரைவில் சீனா மற்றும் இந்திய சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் சீனாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், அதிபர் பதவியேற்ற உடன், அவர் சீனாவுக்கு முதலில் செல்ல விருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva