1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 26 ஜனவரி 2023 (10:22 IST)

ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் முதலிடத்தில் சிராஜ்… ஒரு வருடத்தில் செய்த மேஜிக்!

கடந்த சில ஒருநாள் தொடர்களில் சிராஜின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்து தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிராஜ் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டில் 20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்களை வீழ்த்தியுள்ள சிராஜ் 729 புள்ளிகளோடு ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் மற்றும் ட்ரண்ட் போல்ட் ஆகியோரை அவர் பின் தள்ளியுள்ளார். பூம்ராவுக்கு பிறகு இந்திய பவுலர் ஒருவர் தரவரிசையில் முதல் இடம் பிடித்திருப்பது இதுவே முதல் முறை.