1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: ஞாயிறு, 22 ஜனவரி 2023 (10:21 IST)

மைதானத்துக்குள் ஓடிவந்து சிறுவன் செய்த அதிர்ச்சி செயல்… போட்டிக்கு நடுவே நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

ராய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய இந்திய அணி நியுசிலாந்தை 108 ரன்களுக்குள் அவுட் ஆக்கி, பின்னர் இலக்கை எளிதாக சேஸ் செய்து போட்டியையும் தொடரையும் வென்றது.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் பேட் செய்துகொண்டிருக்கும் போது சிறுவன் ஒருவன் மைதானத்துக்குள் ஓடிவந்து ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். உடனடியாக உள்ளே வந்த மைதான ஊழியர்கள் அவனை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.

ஆனால் ரோஹித் ஷர்மா அந்த சிறுவனிடம் பேசி அவரை தானாகவே மீண்டும் கேலரிக்கு செல்ல வைத்தார். இந்த சம்பவத்தால் போட்டி சில நிமிடங்கள் தடைபட்டது.