1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: ஞாயிறு, 22 ஜனவரி 2023 (10:04 IST)

பேட்டிங்கா பவுலிங்கா? … டாஸ் வென்ற பிறகு ரொம்ப நேரம் யோசித்த ரோஹித் ஷர்மா

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி நியுசிலாந்தை 108 ரன்களுக்குள் அவுட் ஆக்கி, பின்னர் இலக்கை எளிதாக சேஸ் செய்து போட்டியையும் தொடரையும் வென்றது.

ராய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸின் போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் ரெப்ரி பேட்டிங்கா பவுலிங்கா எனக் கேட்க, யோசித்து யோசித்து சிறிது தாமதத்துக்குப் பிறகு ‘பவுலிங்’ என பதிலளித்தார் ரோஹித் ஷர்மா.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாக “கேம் ப்ளானையே” மறந்து விட்டாரா ரோஹித் ஷர்மா என ரசிகர்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர்.