செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2024 (15:29 IST)

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை… இங்கிலாந்து அணி படைத்த சாதனை!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த ஏழாம் தேதி தொடங்கிய நிலையில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. முல்தானில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 556 ரன்கள் சேர்த்தது.

அதன்பிறகு ஆடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 823 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஜோ ரூட் 264 ரன்களும் ஹாரி ப்ரூக் 317 ரன்களும் சேர்த்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 277 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 220 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆகி, 47 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்றது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் கொடுத்து அதே டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.