1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 2 அக்டோபர் 2024 (08:35 IST)

இரண்டே நாளில் போட்டியை வென்றது எப்படி?... கேப்டன் ரோஹித் ஷர்மா சொன்ன காரணம்!

இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடந்த நிலையில் இந்த போட்டியில் இரண்டரை நாட்களுக்கு மேல் மழையால் பாதிக்கப்பட்டது. ஆனாலும் இந்திய அணி மிகச்சிறப்பாக . இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது, இதனை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டம் இரண்டு செஷன் மட்டுமே நடந்தது. அதன் பின்னர் தொடர் மழை பெய்ததால் நான்காம் நாள்தான் ஆட்டம் தொடங்கியது. இதனால் எப்படியும் போட்டி டிராதான் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷை ஆல் அவுட் ஆக்கி, அவர்கள் நிர்ணயித்த 95 ரன்கள் இலக்கை எட்டியது.

இந்த ஆட்ட அணுகுமுறை குறித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “கம்பீருகு பயிற்சியாளராக இது தொடக்க காலம். ஆனால் தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது. இந்த டெஸ்ட்டில் வெல்வதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என யோசித்தோம். வங்கதேசத்தை சீக்கிரம் ஆல் அவுட் செய்து அவர்கள் நிர்ணயிக்கும் இலக்கை அதிரடியாக எட்டவேண்டும் என நினைத்தோம். பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுத்து அதை செய்தார்கள். ஆடுகளமும் பவுலிங்குக்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால் எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி அவர்களின் 20 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள். வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கேற்றவாறு விளையாடினர்” எனக் கூறியுள்ளார்.