1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mohammed shami talked about come back in team india

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

முகமது ஷமி
கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பின்னர் அவர் காயமடைய அவர் கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது. அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் அவர் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தன்னுடைய கம்பேக் குறித்து பேசியுள்ள முகமது ஷமி “நான் முழு உடல் தகுதியையும் எட்டிய பிறகுதான் அணிக்குள் திரும்புவேன். அப்போதுதான் என்னால் காயம் குறித்த அச்சுறுத்தல்கள் இல்லாமல் விளையாட முடியும்.நான் இப்போது பந்து வீசத் தொடங்கியுள்ளேன். நான் எந்த பார்மட்டில் விளையாடுகிறேன் என்பது முக்கியமில்லை. நான் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடவும் வாய்ப்பு உள்ளது” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சென்னை டெஸ்டடில் மூன்று ஸ்பின்னர்களோடு களம் காண்கிறதா இந்திய அணி?