ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் பின்னடைவு… சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய மற்றொரு வீரர்!
இன்னும் ஒரு வாரத்தில் பாகிஸ்தான் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் காயம் காரணமாக தற்போது முக்கிய வீரர்கள் அணியில் இருந்து விலகி வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலர் மிட்செல் ஸ்டார்க் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.