தொடர்புடைய செய்திகள்
- விஜய்யை நான் கூட்டணிக்கு அழைக்கவில்லை: செல்வபெருந்தகை விளக்கம்..!
- பூடான் நாட்டில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை.. இந்தியாவில் எப்போது?
- சந்திராயன் 3 இறங்கிய இடம் 370 கோடி ஆண்டுகள் பழமையானது: இஸ்ரோ தகவல்..!
- 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த பங்குச்சந்தை.. 10 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்..!
- ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு; முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிப்பு: சு வெங்கடேசன் எம்பி
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து பும்ரா, ஜெய்ஸ்வால் நீக்கம்! உள்ளே வந்த வருண் சக்ரவர்த்தி!
வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது பும்ரா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா.
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா.