வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 20 பிப்ரவரி 2025 (11:40 IST)

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நியுசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐசிசி தொடர் ஒன்று பாகிஸ்தானில் நடக்கிறது.

இதனால் அங்கு பெரியளவில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்றைய ஆட்டத்துக்கு பெரிய அளவில் ரசிகர்கள் வருகை இல்லை. இது குறித்து பேசியுள்ள முன்னாள் இங்கிலாந்து அணிக் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் “பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடப்பது மகிழ்ச்சி. ஆனால் உள்ளூர் மக்களிடம் இப்படி ஒரு தொடர் நடப்பதை சொல்ல மறந்துவிட்டார்களா? கூட்டத்தையே காணவில்லை” என நக்கல் அடித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதும் போட்டி உள்ளூரில் நடந்திருந்தால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கும். ஆனால் அந்த போட்டி துபாயில் நடப்பதால் பாகிஸ்தானில் இந்த தொடருக்கு ரசிகர்களின் ஆதரவு இல்லை போலிருக்கிறது. முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணித் தோற்றதால் அந்த அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியை வென்றே ஆகவேண்டும். இல்லையேல் அந்த அணி தொடரை விட்டு வெளியேற நேரும்.