வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 31 அக்டோபர் 2020 (15:18 IST)

முதல்ல பவுலிங் போட்டு ரன்னை குறைப்போம்; நெக்ஸ்ட் சேஸிங்! – டாஸ் வென்ற மும்பை வியூகம்!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 25 போட்டிகளில் மோதிக் கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளில் டெல்லி 13 முறையும், மும்பை 12 முறையும் வென்றுள்ளன. இதனால் இன்றைய ஆட்டம் 50/50 என்ற வெற்றி வாய்ப்பிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வரை செல்ல வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

இரண்டு அணி டாப் ஆர்டர் பேட்டிங் உள்ளிட்டவற்றில் பெரிதாக மாற்றங்கள் இல்லாவிட்டாலும், டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ள மும்பை அணி ரன் ரேட்டை குறைத்து பிறகு சேஸிங் செய்ய திட்டமிட்டுள்ளது. மும்பையின் கை கொடுக்கும் இந்த வியூகம் டெல்லியிடம் முந்தைய ஆட்டத்திலும் செல்லுபடியாகி இருக்கிறது. அப்போது டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.