ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (19:26 IST)

ஐபிஎல்-தொடரிலிருந்து தோனி ஒய்வு??? வீரர்களுக்கு ஆட்டோகிராஃப் கொடுத்தது ஏன்??

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 வகையான கோப்பைகளையும் வென்று கொடுத்த சிறந்த கேப்டன் தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல்-2020 தொடரில் அவர் தலைமையிலான சென்னை அணி பல தோல்விகளைச் சந்தித்து நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்று வெளியேறியது.

இந்நிலையில், சென்னை அணி மீது பல்வேறு விமர்சனங்கள் வெளியான நிலையில் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று தகவல்கள்  பரவியது.


நேற்று அவரிடம் சென்னை அணி வீரர்களும் கொல்கத்தா அணி வீரர்களும் ஆட்டோகிராஃப் வாங்கினர்.
இதுகுறித்து ரசிகர்கள் விவாதம் எழுப்பி வருகின்றனர். ஆனால் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயலதிகாரி காசி விஸ்வநாதன்  அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி தலைமை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.