சனி, 23 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (16:23 IST)

பெண்கள் அணியையும் நாங்களே வாங்கிக்கிறோம்! – ஆர்வம் காட்டும் 5 ஐபிஎல் அணிகள்!

Women IPL
பெண்கள் ஐபில் டி20 போட்டிகள் இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ள நிலையில் அந்த அணிகளை தற்போதைய பிரபல ஐபிஎல் அணிகள் வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு முதலாக இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன. ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடக்கும் இந்த போட்டிகள் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் டி20 போட்டிகளை தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.

அதன்படி இந்த ஆண்டு மார்ச் 3 முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 5 பெண்கள் அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது. இந்த பெண்கள் அணியை உரிமை கோர விரும்பும் நிறுவனங்கள் ரூ.5 லட்சம் விண்ணப்ப கட்டணம் செலுத்தி வருகிற 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில் 5 பெண்கள் ஐபிஎல் அணிகளையும் வாங்க நடப்பு ஆண்கள் ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பெண்கள் அணியை வாங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. பெண்கள் அணியும் இதே பெயரிலேயே இயங்குமா அல்லது பெயர் மாற்றம் இருக்குமா என்பது குறித்து டெண்டர் முடிந்த பின் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K