வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2022 (13:46 IST)

இனி டி 20 போட்டியில் அவர் விளையாடுவது கடினம்தான்… சீனியர் வீரருக்கு குட் பையா?

இந்திய டி 20 அணியை இளம் வீரர்களைக் கொண்ட அணியாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோலி, ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் , ரிஷப் பண்ட்  மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரரான புவனேஷ்வர் குமார் இனிமேல் டி 20 போட்டிகளில் இடம்பெற வாய்ப்புகள் மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. அடுத்த கட்ட இளம் வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ மூத்த வீரர்களுக்கு குட்பை சொல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.