ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (09:59 IST)

கோலி, ரோஹித்துக்குப் பிறகு இந்திய அணிக்கு இவங்க ரெண்டு பேர்தான்… சேவாக் கணிப்பு!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. அதை தொடர்ந்து நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட்டில் ஆரம்பம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் சதமடித்தார். இருவருமே 25 வயதுக்குக் குறைவானவர்கள். அதனால் இவர்கள் இருவரும் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்திய அணியை வழிநடத்தி செல்வார்கள் என சேவாக் கணித்துள்ளார்.

அதில் “25 வயது கூட நிரம்பாத இரண்டு இளம் வீரர்கள் அணிக்கு தேவையான நேரத்தில் சிறப்பாக விளையாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இருவரும் அடுத்த பத்து ஆண்டுகள்  அல்லது அதற்கும் மேலும் கூட உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார்கள். கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் விரைவில் ஓய்வு பெறுவார்கள். அதனால் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் வீரர்களாக நான் இவர்களைப் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.