ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (07:08 IST)

பெயின் கில்லர் ஊசி போட்டுதான் விளையாடினேன்… சதமடித்தும் என் அப்பா திட்டினார்- ஷுப்மன் கில் பகிர்ந்த தகவல்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்களும்,  இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களும் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி பெற 398 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 292 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் சதமடித்து அசத்தினார். கடந்த 12 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்காத கில் சதமடித்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். போட்டி முடிந்ததும் பேசிய அவர் “பீல்டிங்கின் போது எனது கைவிரலில் அடிபட்டது. அதனால் பேட் செய்யும் போது பெயின் கில்லர் ஊசி போட்டுக்கொண்டுதான் விளையாடினேன். கடந்த சில போட்டிகளாக நான் சரியாக விளையாடவில்லை. ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படாமல் நானாக இருந்து விளையாடினேன்.

நான் இந்த போட்டியில் சதமடித்த போதும் நான் அவுட் ஆனதும் என் அப்பா போன் செய்து திட்டினார். சதமடித்த பின்னர் ஒரு பெரிய இன்னிங்ஸாக ஆடாமல் அவுட் ஆகிவிட்டாயே எனக் கத்தினார்.” என ஜாலியாக பகிர்ந்துகொண்டுள்ளார்.