நேற்றைய போட்டியில் அறிமுகமான வீரர்களின் செயல்பாடு எப்படி?
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளையும் வென்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து தற்போது இரு அணிகளும் மோதும் டி 20 தொடர் தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டி நேற்று குவாலியரில் நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 127 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 12 ஓவர்களிலேயே அந்த இலக்கை எட்டி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது.
இந்த போட்டியில் கடந்த ஐபிஎல் சீசனில் கலக்கிய மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இவர்களில் மயங்க் யாதவ் தன்னுடைய முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார். அவர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். அவர் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்தார். நிதிஷ் குமார் பேட்டிங்கில் 15 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். பவுலிங்கில் அவர் 2 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை.