வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (08:01 IST)

காஷ்மீர், ஹரியானாவில் இந்தியா கூட்டணி ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்..!

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்து முடிந்து உள்ள நிலையில், நேற்றுடன் ஹரியானா மாநில தேர்தல் முடிவடைந்ததால் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹரியானா மாநிலத்தில் நடந்த 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது என்றும், இங்கு பாஜக படுதோல்வி அடையும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஹரியானாவில் காங்கிரஸ் 40 முதல் 50 இடங்களை பிடிக்கும் என்றும், பாஜக 19 முதல் 30 இடங்களை பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Edited by Siva