இட்லி, சாம்பார் தான் மயாங் அகர்வால் வெற்றியின் ரகசியம்!!

Arun Prasath| Last Updated: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (17:20 IST)
டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த மயாங் அகர்வால், இட்லி, சாம்பார் தான் எனது வெற்றியின் ரகசியம் என கூறியுள்ளார்.

இந்தியா-தென் ஆஃப்ரிக்காவிற்கு இடையே நடைபெற்று வரும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில், அதிரடியாய் விளையாடிய மாயாங் அகர்வால் 195 பந்துகளில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் மயாங் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு கிரிக்கெட் வீரர் புஜாராவுடன் உரையாடிய மயாங் அகர்வால், புஜாரா கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.அதில், தாங்கள் காலை உணவாக என்ன சாப்பிடுவீர்கள் என கேட்டதற்கு இட்லி, அவற்றிற்கு தேங்காய் சட்னி தான் காரணம் என்று கூறினார்.

மேலும் அவர், தனது பேட்டிங், அணுகுமுறை மற்றும் அதன் பின்னால் உள்ள முயற்சிகள் குறித்து பேசியபோது நீண்ட தூர ஓட்டம், தியானம் ஆகியவையே காரணம் என கூறியது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :