புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (14:22 IST)

கேப்டனின் கட் அவுட்டை கிழித்த ரசிகர்.. வைரல் வீடியோ

டி20 போட்டியில் இலங்கையுடனான போட்டியில், பாகிஸ்தான் படு தோல்வியடைந்ததை அடுத்து, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கேப்டன் சர்ஃபராஸ் கட் அவுட்டை உடைத்துள்ளார்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடியது. இதில் பாகிஸ்தான் படு தோல்வி அடைந்தது. அந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், கடும் கோபத்துடன், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கட் அவுட்டை ஆவேசமாக தாக்கி உடைத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.