புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : சனி, 12 அக்டோபர் 2019 (11:18 IST)

8 ஆவது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..

உலக சாம்பியன்ஷிப் குத்து சண்டை போட்டிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், தனது 8 ஆவது பதக்கத்தை மேரி கோம் உறுதி செய்துள்ளார்.

ரஷ்யாவின் உலான்-உடே பகுதியில், உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிருக்கான 51 கிலோ எடை பெரிவில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் பங்கு பெற்றார். இந்த தொடரின் முதல் சுற்றில் அவருக்கு ”பை” அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது சுற்றில் தாய்லாந்து நாட்டின் ஜூடாம்ஸ் ஜிட்போங்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற கால் இறுதி போட்டியில், கொலம்பியா வீராங்கனை வெலன்சியா விக்டோரியாவுடம் மோதினார். அதில் விக்டோரியாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளதாகவும் தெரியவருகிறது. முன்னதாக மேரி கோம் 6 தங்கம், ஒரு வெள்ளி என 7 பதக்கங்கள் பெற்றுள்ள நிலையில், தற்போது 8 ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.