புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2019 (11:43 IST)

பஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே..

பஞ்சாப் அணியின் இயக்குனராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே, கடந்த 2017 ஆம் ஆண்டு, தான் வகித்திருந்த இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் தான் கும்ப்ளே பதவியிலிருந்து விலகினார் என கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற பஞ்சாப் அணியின் போர்டு மீட்டிங்கில், அணில் கும்ப்ளே ஐபிஎல்-ன் பஞ்சாப் அணியின் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. முன்னதாக பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியின் பயிற்சியாளராக ஜார்ஜ் பெய்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக அணில் கும்ப்ளே மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.