1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 ஜூலை 2022 (16:38 IST)

சச்சினை அவமரியாதை செய்தாரா ஆஸி வீரர் லபுஷான்… இந்திய ரசிகர்கள் கோபம்!

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷான் தன்னுடைய லேட்டஸ்ட் ட்வீட் ஒன்றுக்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் இணைக்கப்பட்டு இருப்பது பற்றி மகிழ்ச்சியாக ட்வீட் செய்திருந்தார். அதில் “மீண்டும் காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட்டை பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள் “ எனக் கூறி இருந்தார்.

இந்த ட்வீட்டை ஷேர் செய்த ஆஸி அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவரான மார்னஸ் லபுஷான் “ஆம் சச்சின். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி மிகச்சிறப்பாக இருக்கும்.” எனக் கூறியிருந்தார். இந்த ட்வீட்டில் லபுஷான் சச்சினை மரியாதை இல்லாமல் அவர் குறிப்பிட்டு விட்டதாக இந்திய ரசிகர்கள் அவரை டிவிட்டரில் சரமாரியாக ட்வீட் செய்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.