1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஜூலை 2022 (07:45 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

petrol
சென்னையில் கடந்த 67 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்று 68வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்பது பொது மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது 
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரியை மற்ற மாநிலங்கள் குறைத்தது போல் தமிழகத்திலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது