1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Markwood relieved in IPL Season

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மார்க்வுட்! – புதிய அணிக்கு வந்த சோதனை!

Cricket
ஐபிஎல் அணியில் லக்னோ அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் மார்க்வுட் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற உள்ளன. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் தற்போது புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்த அணிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் புதிய அணியான லக்னோ இங்கிலாந்து வீரர் மார்க்வுட்டை வாங்கியது.

தற்போது இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடரில் மார்க்வுட் விளையாடி வந்த நிலையில் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக மார்க்வுட் தெரிவித்துள்ளார். முக்கிய வீரரான மார்க்வுட் அணியிலிருந்து விலகுவது புதிய அணியான லக்னோவுக்கு சிரமத்தை அளிக்கும் என கூறப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அணிக்கு திரும்பி வந்த ABD! ஆர் சி பி அணிக்கு கூடுதல் பலம்!