1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 மார்ச் 2022 (17:37 IST)

மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த வீராங்கனை: உலகக்கோப்பையில் பரபரப்பு!

மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த வீராங்கனை: உலகக்கோப்பையில் பரபரப்பு!
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தொடரில் இன்று மேற்குவங்க தீவு மற்றும் வங்கதேச அணிகள் மோதியது என்பதும் தெரிந்ததே
 
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த போட்டி நடந்து கொண்டிருந்தபோது நாற்பத்து ஏழாவது ஓவரை வீச வந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வீராங்கனை கான்னல் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார்
 
இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்த மைதானத்தில் திடீரென வீராங்கனை ஒருவர் மயங்கி விழுந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.