1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (09:43 IST)

மீண்டும் வர்ணனையாளராக ரவி சாஸ்திரி? – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி மீண்டும் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவி சாஸ்திரி தனது ஓய்விற்கு பிறகு பல கிரிக்கெட் தொடர்களில் வர்ணனையாளராக இருந்து வந்தார். அவரது நுட்பமான கிரிக்கெட் வர்ணனையை கேட்பதற்கே ரசிகர்கள் பலர் இருந்து வந்தனர்.

பின்னர் அணி பயிற்சியாளராக ஆன பின் கிரிக்கெட் வர்ணனைகளை நிறுத்தி இருந்தார் ரவி சாஸ்திரி. இந்நிலையில் தற்போது பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய ரவி சாஸ்திரி 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் வர்ணனையாளராக களமிறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.