வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (22:31 IST)

இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் காயம்...

இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து

 இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவை சாதாரணமாக எடைபோட்ட இங்கிலாந்து அணி பெரும் தோல்வியைச் சந்தித்தது.

அடுத்த நடைபெறவுள்ள 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி புதிய மாற்றம் செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் கடந்த டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய இங்கிலாந்து வீரர் மார்க்வுட் காயம் காரணமாக விலகினார். இந்தத் தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னணி வீரர்கள்  காயம் காரணமாக விலகுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ்வோக்ஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது