செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (16:10 IST)

இந்தியாவின் சரியானக் கேப்டன் கோலிதான்… நாஸர் ஹுசைன் பாராட்டு!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் பாராட்டியுள்ளார்.

இந்திய அணி இப்போது டெஸ்ட் போட்டிகளில் வெற்றிநடைப் போட்டு உலகின் நம்பர் ஒன் அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு கோலியின் ஆக்ரோஷமான தலைமையே காரணம் என பாராட்டப்படுகிறது. இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கோலியை பாராட்டியுள்ளார்.

அதில் ‘ சரியான நேரத்தில் வந்த சரியான கேப்டன் தான் விராட் கோலி. பவுலர்களுக்கு ஏற்ற ஆக்ரோஷமான கேப்டன் அவர். அமைதியான பும்ரா ஆண்டர்சனை தாக்குதல் நடத்தியது கோலியால்தான். அவரை நிறையப் பேருக்குப் பிடிக்காது. ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.’ எனக் கூறியுள்ளார்.