1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 21 ஆகஸ்ட் 2021 (17:08 IST)

கோலி என்னிடம் சொன்னதை இப்போது சாதித்துக் காட்டியுள்ளார்… ஆலன் டொனால்ட்!

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் கோலியை பாராட்டி பேசியுள்ளார்.

இந்திய அணி இப்போது டெஸ்ட் போட்டிகளில் வெற்றிநடைப் போட்டு உலகின் நம்பர் ஒன் அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு கோலியின் ஆக்ரோஷமான தலைமையே காரணம் என பாராட்டப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் கோலியின் தலைமையைப் பாராட்டியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் ‘ 2015 ஆம் ஆண்டு கோலி என்னிடம் பேசிய போது டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை நம்பர் ஒன் அணியாக கொண்டுவர வேண்டும் என்பதே எனது லட்சியம் எனக் கூறினார். அதை இப்போது அவர் சாதித்துக் காட்டியுள்ளார். அவர் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.