1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (21:26 IST)

2வது ஒருநாள் போட்டி: ஒரு ஹாட்ரிக்கும் ஒரு மோசமான சாதனையும்!

விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஒரு ஹாட்ரிக் சாதனையும், ஒரு மோசமான சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளது 
 
இன்றைய போட்டியில் 387 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 280 ரன்கள் மட்டுமே எடுத்து 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஒரு ஹாட்ரிக் சாதனை மற்றும் ஒரு மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் 33 வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் ஹாட்ரிக் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். ஏற்கனவே குல்தீப் யாதவ், 19 வயதுக்கு உட்பட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது ஒருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். எனவே இந்திய வீரர் ஒருவர் ஒரு நாள் போட்டிகளில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்த பெருமை குல்தீப் யாதவ்வுக்கு மட்டுமே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை எடுத்த உள்ள நிலையில் இந்த போட்டியில் ஒரு மோசமான சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் மேற்கு இந்திய கேப்டன் பொல்லார்டு ஆகிய இருவரும் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு அணி கேப்டன்களும் முதல் பந்திலேயே டக் அவுட் ஆவது இதுதான் முதல்முறை என்பது தான் அந்த மோசமான சாதனை