தொடர்புடைய செய்திகள்
- இதுதான் சரியான நேரம்… அவரைத் தூக்கி டெஸ்ட் அணியில் போடுங்கள் – முகமது கைப் ஆலோசனை!
- வின்னிங் சிக்ஸ் அடித்த ஹர்திக் பாண்ட்யா: தொடரை வென்றது இந்தியா!
- ஹர்திக் அபாரம்: ஆஸ்திரேலியாவுக்கு 303 இலக்கு கொடுத்த இந்தியா!
- விரைவில் பந்துவீசுவேன் – ஹர்திக் பாண்ட்யா உறுதி!
- தோல்வி அடைந்தாலும் ஹர்திக் பாண்ட்யா செய்த சாதனையால் ஆறுதல்!
உணர்ச்சிவசப்பட்டு அழுத க்ருணாள்… கட்டித்தழுவி தேற்றிய தம்பி!
அறிமுகப்போட்டியிலேயே அதிவேக அரைசதம் அடித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் க்ருணாள் பாண்ட்யா.
நேற்றைய போட்டியில் ஆல்ரவுண்டர் க்ருணாள் பாண்டியா, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 6 ஆவது விக்கெட்டுக்கு இறங்கிய அவர் அதிரடியில் புகுந்து விளாசினார். இதன் மூலம் அவர் 31 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். அதில் 7 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடக்கம்.
இந்த போட்டியில் அவர் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அறிமுக வீர்ர ஒருவரின் அதிவேக அரைசதமாகும். அவரது இன்னிங்ஸ் முடிந்ததும் அவரை நேர்காணல் செய்ய தொகுப்பாளர் அழைத்தபோது எதுவும் பேச முடியாமல் அவர் உணர்ச்சிவசபட்டு அழத் தொடங்கினார். அப்போது அருகில் இருந்த அவரின் சகோதரர் ஹர்திக் பாண்ட்யா கட்டியணைத்து தேற்றினார்.
அடுத்த கட்டுரையில்