திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2020 (18:02 IST)

தோல்வி அடைந்தாலும் ஹர்திக் பாண்ட்யா செய்த சாதனையால் ஆறுதல்!

தோல்வி அடைந்தாலும் ஹர்திக் பாண்ட்யா செய்த சாதனையால் ஆறுதல்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இருப்பினும் இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும் இந்திய அணி ஹர்திக் பாண்டியா ஒரு சாதனையை செய்து உள்ளார். அவர் மிக வேகமாக ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அது மட்டுமின்றி உலக அளவில் மிக வேகமாக ஆயிரம் ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் ஹர்திக் பாண்டியா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும் ஹர்திக் பாண்டியாவின் சாய்ந்த சாதனை இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது 
 
ஏற்கனவே இதே போட்டியில்  ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 5000 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் என்ற சாதனை பட்டியலில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது