பாகிஸ்தானுக்கு எதிரான சதம்… ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட கோலி!
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் கூட கோலி சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி அவுட்டானார்.
ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து தான் இன்னமும் ரன் மெஷின்தான்” என்பதை நிரூபித்துள்ளார்.
இந்த அபாரமான இன்னிங்ஸ் மூலம் ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் கோலி முன்னேற்றம் கண்டுள்ளார். தற்போது அவர் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் மூன்று இடங்களில் ஷுப்மன் கில், பாபர் அசாம் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் உள்ளனர்.