திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (18:28 IST)

ரபாடா செய்த சொதப்பல், சிரித்து கலாய்த்த கோலி..வைரல் வீடியோ

தென் ஆஃப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ரபாதா செய்த சொதப்பல் காரியத்தை கேலி செய்யும் விதமாக விராத் கோலி சிரித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா-தென் ஆஃப்ரிக்காவுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதனைத் தொடர்ந்து தென் ஆஃப்ரிக்கா அணி, பேட்டிங் செய்து இன்றைய நாலில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனிடையே, முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்தபோது, தென் ஆஃப்ரிக்க வீரர் மகாராஜ் வீசிய ஓவரில் விராட் கோலி அருகில் அடித்து விடு ரன் ஓடினார். அந்த பந்தை பிடித்த கிரிக்கெட் வீரர் ரபடா ரன் அவுட் எடுக்க முயற்சித்து, ஸ்டெம்ப்பை நோக்கி வீசினார். ஆனால் அது ஓவர் த்ரோ சென்று, பவுண்டரி லைனை தாண்டியது. இதன் மூலம் இந்திய அணிக்கு 5 ரன்கள் கிடைத்தது.

இதனை கிண்டல் செய்யும் வகையில், ரபாடாவை பார்த்து தனது கட்டை விரலை காட்டி சிரித்தார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.