தொடர்புடைய செய்திகள்
- எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி… RCB அணி குறித்து விஜய் மல்லையா நெகிழ்ச்சி!
- கண்ணீரில் மிதக்கிறேன்… அண்ணனைப் பற்றி ட்வீட் செய்த ஹர்திக் பாண்ட்யா!
- இந்த அணிக்காக நான் என்னுடைய இளமை மற்றும் அனுபவத்தைக் கொடுத்துள்ளேன்… எமோஷனலாக பேசிய கோலி!
- ஐபிஎல் கோப்பையுடன் இன்று பெங்களூருவில் வீதியுலா செல்லும் RCB அணி!
- ஈ சாலா கப் நம்து.. டிவில்லியர்ஸ் & கெய்லைப் பெருமைப்படுத்திய கோலி!
நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!
50 ஓவர் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என கிரிக்கெட்டின் மிகப்பெரிய கோப்பைகளை எல்லாம் கைவசம் வைத்திருந்தாலும் விராட் கோலிக்குக் கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை என்பது எட்டாக் கனியாக இருந்தது. அதை எட்டும் வகையில் நேற்று கோலி படை ஐபிஎல் கோப்பையைக் கைகளில் ஏந்திவிட்டது.
கோப்பையை வென்ற பின்னர் பேசிய கோலி “இந்த வெற்றி அணிக்கும், அதன் ரசிகர்களுக்குமானது. நான் இந்த அணிக்காக என்னுடைய இளமை, உற்சாகம் மற்றும் அனுபவம் என அனைத்தையும் கொடுத்துள்ளேன். ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல முயற்சித்துள்ளேன். இறுதியாக அதைப் பெறுவது நம்பமுடியாததாக உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி பந்து வீசப்பட்ட பிறகு நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் ஐபிஎல் எதிர்காலம் குறித்துப் பேசும்போது “நான் எப்போதும் ஆர் சி பி அணியுடன் இருந்தேன். சில நேரங்களில் நான் வேறு மாதிரி யோசித்த தருணங்களும் உண்டு. ஆனால் என் இதயம் பெங்களூருவில்தான் இருந்தது. நான் ஐபிஎல் விளையாடும் வரை ஆர் சி பி அணிக்காகதான் விளையாடுவேன். இன்றிரவு நான் ஒருக் குழந்தையைப் போல தூங்குவேன். என் மடியில் ஐபிஎல் கோப்பை உள்ளது.” எனக் கூறியுள்ளார்.