1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Virat kohli talked about the bond with RCB

இந்த அணிக்காக நான் என்னுடைய இளமை மற்றும் அனுபவத்தைக் கொடுத்துள்ளேன்… எமோஷனலாக பேசிய கோலி!

ஐபிஎல்
கடைசியில் அது நிகழ்ந்தே விட்டது. 18 ஆண்டுகளாக கோப்பையை எப்போது ஆர் சி பி அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு, அதன் ரசிகர்களுக்கு இருந்து வந்தது போலவே, 17 ஆண்டுகளாகக் கோப்பையே வெல்லாத அணி என்ற கேலிகளும் அந்த அணி மேல் எழுந்தன. இரண்டுக்குமான பதிலாக நேற்று ஐபிஎல் கோப்பையை ஆர் சி பி அணி கையில் ஏந்திவிட்டது.

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் பட்டம் வெல்லவில்லை என்றாலும் ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு அணியாக ஆர் சி பி அணி உள்ளது. அந்த அளவுக்கு கர்நாடகா தாண்டியும் அந்த அணிக்கு பரவலான ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனால் உலகம் முழுவதும் உள்ள ஆர் சி பி அணி ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அணியின் நாயகன் கோலி இந்த வெற்றி குறித்தும் ஆர் சி பி அணியுடனான உறவு குறித்தும் பேசும்போது “இந்த வெற்றி அணிக்கும், அதன் ரசிகர்களுக்குமானது. நான் இந்த அணிக்காக என்னுடைய இளமை, உற்சாகம் மற்றும் அனுபவம் என அனைத்தையும் கொடுத்துள்ளேன். ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல முயற்சித்துள்ளேன்.  இறுதியாக அதைப் பெறுவது நம்பமுடியாததாக உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி பந்து வீசப்பட்ட பிறகு நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
கண்ணீரில் மிதக்கிறேன்… அண்ணனைப் பற்றி ட்வீட் செய்த ஹர்திக் பாண்ட்யா!