1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2022 (09:04 IST)

“கடைசி வரை ஆடவேண்டும் என…” கேப்டன் குறித்து கோலி!

நேற்று நடைபெற்ற போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வென்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி 20 தொடரின் மூன்றாவது போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 186 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் கோலி ஆகியோரின் அபார அரைசதத்தால் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் பேசிய கோலி “நான் சூர்யகுமாரின் அதிரடியான ஆட்டத்தைப் பார்த்ததும், கேப்டனிடம் இருந்து எனக்கு ‘கடைசி வரை நீங்கள் ஆடவேண்டும்” என சைகை கிடைத்தது. சூர்யகுமார் கடந்த 6 மாதங்களாக சிறப்பாக விளையாடி வருகிறார். போட்டி இவ்வளவு தூரம் சென்றிருக்க கூடாது. கடைசி ஓவரில் 6 ரன்களுக்குள் இலக்கு இருந்திருக்க வேண்டும். அணிக்கு பங்களித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. “ எனக் கூறியுள்ளார்.