திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2022 (07:55 IST)

ஆஸ்திரேலியாவை வென்றதால் உலக சாதனை படைத்த இந்திய அணி!

India
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இருந்த நிலையில் இந்திய அணி நேற்றைய வெற்றி காரணமாக தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை நேற்று இந்திய அணி வீழ்த்தி உள்ளதை அடுத்து உலக சாதனையையும் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஆண்டில் அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது
 
கடந்த 2021ஆம் ஆண்டு 20 டி20 போட்டிகளில் வென்று பாகிஸ்தான் உலக சாதனை செய்து இருந்த நிலையில் தற்போது 21  போட்டிகளில் வென்று இந்தியா அந்த சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.