1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

“நான் கம்பீரை கட்டிப்பிடித்தது பலருக்கு பிடிக்கவில்லை…மசாலா தீர்ந்துவிட்டது”… கோலி கருத்து!

ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு முறை கோலி கம்பீர் மோதல் மைதானத்துக்குள்ளேயே நடந்துள்ளது. அந்த இரு நிகழ்வுகளும் ரசிகர்களை ஆக்ரோஷப்பட வைத்த நிகழ்வுகளாக அமைந்தன. அப்போது கோலிக்கு ஆதரவாகவும் கம்பீருக்கு எதிராகவும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில் கோலியின் ஆர் சி பி மற்றும் கம்பீர் அங்கம் வகிக்கும் கொல்க்த்தா அணி போட்டியின் போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி கட்டித் தழுவி கொண்டனர்.  இந்த நிகழ்வின் போது தொலைக்காட்சியில் வர்ணனை செய்துகொண்டிருந்த ரவி சாஸ்திரி “கம்பீரின் இந்த செயலுக்காக அந்த அணிக்கு பேர்ப்ளே விருது கொடுக்கப்படலாம்” எனக் கூறினார். அதற்கு சுனில் கவாஸ்கர் “பேர்ப்ளே விருது மட்டும் இல்லை ஆஸ்கர் விருதே கொடுக்கப்படலாம்” எனக் கலாய்க்கும் விதமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி பேசியுள்ள விராட் கோலி “நான் நவீன் உல் ஹக்கையும் கம்பீரையும் கட்டிப்பிடித்தது பலருக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு மசாலா தீர்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள். நாங்கள் ஒன்றும் சிறுவர்கள் இல்லை. பிரச்சனைகள் முடிந்துவிட்டன” எனக் கூறியுள்ளார்.